ஜனவரி முதல் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்யும் வகையில் 'இன்ஸ்பெக்டர் ராஜ்' திட்டம் அறிமுகம் செய்யபட உள்ளநிலையில், தொழில்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை: ஜனவரி முதல் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்யும் வகையில் 'இன்ஸ்பெக்டர் ராஜ்' திட்டம் அறிமுகம் செய்யபட உள்ளநிலையில், தொழில்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வணிகம் மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மாதம்தோறும் ஜிஎஸ்டி திட்டத்தின் கீழ் தற்பொழுது இரண்டு வகையான கணக்கு ஆவணங்களை மாதந்தோறும் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்து வருகின்றன.
வரும் ஜனவரி 2022 முதல் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொழில் நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்து அவர்கள் தாக்கல் செய்யும் இரண்டு வகையான கணக்குகளை ஆய்வு செய்யலாம் என்றும் ஏதேனும் தவறுகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் நிதி சட்டத்தில் மாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கள ஆய்வு மேற்கொள்ளும் 'இன்ஸ்பெக்டர் ராஜ்' என்ற இதுபோன்ற திட்டத்துக்குத் தொழில் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் முறையில் மட்டுமே ஜிஎஸ்டி அலுவலகம் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தால் முறைகேடு நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (CODISSIA) தலைவர், ரமேஷ் பாபு கூறுகையில், "இதுபோன்ற இத்திட்டம் அமல்படுத்தப்படும் போது நேர்மையான முறையில் தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்படும்.
கள ஆய்வு மேற்கொள்ள அனுமதித்தால் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ள தொழில் துறையினருக்கு இதுபோன்ற திட்டம் மேலும் சுமையை அதிகரிக்கும்." என்றார்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIEMA) தலைவர், கார்த்திக் கூறியதாவது, "உலக அளவில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் 'இன்ஸ்பெக்டர் ராஜ்' போன்ற திட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இன்றைய சூழலில் ஜிஎஸ்டி அலுவலகம் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் தொழில் துறையினர் சமர்ப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆன்லைனில் அவற்றைச் சரிபார்த்து ஏதேனும் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரை அழைத்து விளக்கம் கேட்கலாம்.
அதைவிடுத்து அதிகாரிகளுக்குக் கள ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிப்பது என்பது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கு இதுபோன்ற திட்டம் புதிய தலைவலியை ஏற்படுத்தும்." என்றார்.