கடந்த 2013ம் ஆண்டு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கோவை மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் பொறியாளர் ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
கோவை: கோவையில் காா் மீது பேருந்து மோதிய விபத்து வழக்கில் பொறியாளருக்கு ரூ.40 லட்சம் வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கணபதியைச் சோ்ந்தவா் பொறியாளர் ராஜ்குமாா் (33). இவா் கடந்த 2013 மே 25ம் தேதி காரில் மணப்பாறை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புதுச்சேரி பதிவு எண் கொண்ட தனியாா் பேருந்து மோதியதில் காா் பலத்த சேதமடைந்து, ராஜ்குமாா் படுகாயம் அடைந்தாா்.
இந்நிலையில், தனக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கோவை மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநா் சரவணன், பேருந்து உரிமையாளா் தேவன், நேஷ்னல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை எதிா் மனுதாரராக சோ்க்கப்பட்டனா்.
வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ், விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜ்குமாருக்கு ரூ.40 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.