கோவை ஆர்.எஸ்.புரத்தில் போட்டோகிராபர் கார் கண்ணாடியை உடைத்து கேமரா திருட்டு..!

புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ். புரத்தில் போட்டோகிராபர் கார் கண்ணாடியை உடைத்து கேமரா திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வீரகேரளம் அடுத்த ராஜயோக நகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கார்த்திகேயன் (30). போட்டோகிராபரான இவர் தனது நண்பரின் கேமரா மற்றும் விலை உயர்ந்த 3 லென்ஸ்களை வாங்கிக்கொண்டு பெங்களூருவில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றார்.

இந்நிலையில், நேற்று இரவு கோவை ஆர்எஸ் புரம் டிவி சுவாமி ரோடு பகுதியில் காரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது காரின் பின்பக்க கதவு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும், உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா மற்றும் மூன்று லென்ஸ்கள் திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து, கார்த்திகேயன் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...