கோவை கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவுநாள் அனுசரிப்பு..!

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.


கோவை: கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவுநாள் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என்றும் உறுதி ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனோகரன், அம்மா பேரவை பொருளாளர் சிங், லட்சுமணன், தங்கராஜ், சாந்தலிங்கம், மாரிமுத்து, சிவா, கார்த்திகேயன், வினு, உமா, மகேஷ், சக்தி, கிரி, நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...