விரைவில் கோவை அரசு பேருந்துகளில் 'புகார்' புத்தகம் வைக்கப்படும்..!

தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிகளில் திருத்த வரைவு அறிவிப்பு ஆணைப்படி விரைவில் கோவை அரசு பேருந்துகளில் புகார் புத்தகம் வைக்கப்படும் என அதிகாரிகள் தகவல்.


கோவை: கோவை கோட்டத்தில் உள்ள அரசு பேருந்துகளில் விரைவில் புகார் புத்தகம் வைக்கப்படும், என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ் பிரபாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து அதற்கான வரைவு அறிவிப்பு ஆணை வெளியிடப்பட உள்ளது. இந்த வரைவு ஆணை செல்லத்தக்க காலம் 30 நாட்கள் ஆகும். அதற்கு முன்பு இந்த வரைவு குறித்து மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், கருத்துக்கள் இருந்தாலும் அல்லது ஆட்சேபனை இருந்தால் அதுபற்றி உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்கலாம்.

இந்த வரைவு திருத்தத்தின்படி அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் இல்லாத நிலையில், அந்த பேருந்தின் ஒட்டுநர்கள் பொறுப்பாளர்களாக அமர்த்தப்படுவர். அந்த வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி யாராவது பெண்களை நோக்கி போட்டோ அல்லது வீடியோ எடுத்தல் என்பது உள்ளிட்ட ஆபாசமான செயல்பாடுகளில் ஈடுபட்டால், அவரை நடத்துனர் பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

பெண்களிடம் தவறாக நடக்கும் எந்த ஒரு பயணியையும் அவரது இருக்கையில் இருந்து எழுப்பி அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லலாம். அந்த பேருந்தில் புகார் புத்தகம் ஒன்றை பயணிகள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் விதமாக வைக்க வேண்டும். அந்த புத்தகத்தை காவல் அதிகாரிகள் அல்லது போக்குவரத்து அதிகாரிகள் கேட்கும்போது கொடுக்க வேண்டும்", இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆணையை செயல்படுத்துதல் குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை கோட்டத்தில் உள்ள அரசு பஸ்களில் புகார் புத்தகங்கள் வைக்கப்படும். பயணிகள் அவர்களது கருத்துகளை அதில் தெரிவிக்கலாம். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...