திருப்பூரில் 60 லட்சம் ரூபாய் நிலமோசடி - பெண் தற்கொலைக்குக் காரணமான இருவர் கைது..!

60 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு தனது மகளிடம் ஒப்படைக்குமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


திருப்பூர்: திருப்பூரில் 60 லட்சம் நிலமோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதற்கு காரணமான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் அருகே உள்ள அ. குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி ஷீலா தேவி (35). இவர் தனது 9 வயது மகளுடன் அ. குரும்பபாளையத்தில் வசித்து வருகிறார்.

இவர், கடந்த வாரம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான அ.குரும்பபாளையத்தில் 45 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் வைத்து பணம் வாங்கியதாகவும், பிறகு நிலத்தை விற்பனை செய்த வகையில் ரூ. 60 லட்சத்தை சிவராஜ் கொடுக்காமல் மோசடி செய்து வருவதாகவும் புகார் அளித்தார்.

இந்நிலையில், ஷீலா தேவி புதன்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணையில், ஷீலா தேவி தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த கடிதத்தில் தனக்கு ரூ. 60 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றிய திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் (40), கதிர்வேல் (35) உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணத்தை பெற்று தனது மகளிடம் ஒப்படைக்குமாறும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜ் மற்றும் கதிர்வேலை கைது செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...