அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார்..!

சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் எஸ்.பிக்கு வந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜியை காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸ் தேடி வருகிறது.

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க இந்திய முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...