கிணத்துக்கடவு அருகே மேற்கூரை இடிந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!

பழுதடைந்த கட்டிடங்கள் அருகில் பஸ்நிறுத்தம் உள்ளதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நிற்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.


கோவை: கிணத்துக்கடவு அருகே S.மேட்டுபாளையத்தில் மேற்கூரை இடிந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே S.மேட்டுப்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், ரேசன்கடை கட்டப்பட்டது.

இந்த அரசு கட்டிடங்கள் ஊருக்குள் இருந்ததால் பொதுமக்கள் எளிதில் ரேசன்கடைக்கும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் சென்று வந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த 2 கட்டிடங்களின் உள்ள ரேசன்கடை மேற்கூரை இடிந்து விழுந்தது.

அதேபோல, மற்றொரு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் முன்பகுதியின் உள்ள மேற்கூரை கீழே விழுந்து அந்தரத்தில் தொங்குகிறது.

இந்நிலையில், தற்போது இரண்டு கட்டிடங்களும் பழுதடைந்துள்ளதால் இங்கிருந்த ரேசன்கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகமும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், பழுதடைந்த கட்டிடங்கள் அருகில் பள்ளிகளும், பஸ்நிறுத்தமும் உள்ளதால் இந்த பகுதியில் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் நிற்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் நிலையில் உள்ளது.

எனவே, ஊருக்கு நடுவே உள்ள பழுதடைந்த 2 கட்டிடங்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு விரைந்து இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...