கோவை வடவள்ளி அருகே ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள்..!! பொதுமக்கள் அச்சம்..!

வனத்துறையினர் தினம்தோறும் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி அருகே ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி ஐஓபி காலனியில் கடந்த 22ம் தேதி மாலை 7.30 மணியளவில் 7 காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்துள்ளன. இந்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் நிலையில், தற்போது மாலை நேரத்திலேயே யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், யானைகளை கண்டால் அதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், யானைகள் மாலை நேரங்களிலேயே ஊருக்குள் வர துவங்கியிருப்பதால் அச்சமடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள், வனத்துறையினர் தினம்தோறும் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...