கோவை வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் 4-பேர் சரண்

கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் நான்கு பேர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் நான்கு பேர்இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் ஸ்ரீராம் என்கின்ற குரங்கு ஸ்ரீராம் (22). கடந்த 20-ஆம் தேதி ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பன் கவாஸ்கான் (23) இருவரும் பைக்கில் ரத்தினபுரியில் இருந்து அஞ்சுகம் நகர் வழியாக துடியலூர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது 2-பைக்கில் பின் தொடர்ந்து வந்த 4-பேர் கொண்ட கும்பல் ஸ்ரீராம் மற்றும் கவாஸ்கானை வழிமறித்துமறைத்து வந்திருந்த வீச்சரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஸ்ரீராமை சரமாரியாக வெட்டியது. இதில் ஸ்ரீராம் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதில் கொலைவெறி கும்பலிடம் மாட்டாமல் கவாஸ்கான் தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து கொலைவெறிக் கும்பல் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சரவணம்பட்டி காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீராமை வெட்டி கொன்றது முன்விரோதம் காரணமாக கோகுல்மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

இதற்காக இரண்டு தனி படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீராம் என்ற குரங்கு ஸ்ரீராமை வெட்டிக் கொன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுஜின்குமார், கோகுல், ரவீந்திரன், மணிகண்டன் ஆகிய நான்கு பேர்இன்று காலை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...