கோதவாடியில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

முகாமில் கலந்து கொண்ட மாடுகளுக்குக் கோமாரி நோய், குடற்புண் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டது. மேலும் சினைப் பரிசோதனை மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் இன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோதவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் அழைத்து வரப்பட்டது.



அப்போது முகாமில் கலந்து கொண்ட வடசித்தூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் பிரகாஷ், சொக்கனூர் கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் கெளசிகா ஆகியோர் கலந்து கொண்டு மாடுகளுக்குக் கோமாரி நோய், குடற்புண் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டது, மேலும் சினைப் பரிசோதனை மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் முகாமில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...