பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூட்டுறவுச் சங்கங்களில் தமிழக அரசால் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடனில் முறையாக உரியக் காலத்தில் கடனை கட்டி புதுப்பித்த விவசாயிகளுக்குத் தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை.

கூட்டுறவுச் சங்கங்களில்காலங்காலமாகப் பயிர்க்கடன் பெற்று வந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தமிழக அரசு கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், முதலமைச்சர் உடனடியாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

காலங்காலமாகக் கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று வந்த விவசாயிகள் உரிய நேரத்தில் அதிகாரிகள் கடனை கட்ட சொல்லி கெடுபிடி செய்ததால் கொரோனாகாலத்திலும் சிரமப்பட்டு முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது.

ஆனால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பழைய கடனை புதுப்பிக்கப் பணம் செலுத்திய விவசாயிகளுக்குக் கூட்டுறவு அதிகாரிகள் செய்த குளறுபடியால் 40 சதவீத விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததில் சலுகை கிடைக்கவில்லை.

எனவேஅனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும்பயிர்க் கடன் கால அவகாசத்தை 31.1.2021வரை நீடிப்பு செய்துஅரசாணை வெளியிடத் தமிழக முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றுஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இல்லை என்றால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...