கோவை சிஎம்சி காலனி பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் 2023ம் ஆண்டுக்குள் புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வரும் - மாநகராட்சி செயற்பொறியாளர் தகவல்!

6 தளங்களில், 448 குடும்பங்கள் வசிக்கும் வகையில் ரூ. 45.07 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.


கோவை: கோவை டவுன்ஹால் சிஎம்சி காலனி பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் புதிய கட்டிடங்கள் 2023ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கோவை சிஎம்சி காலனி பொது மக்கள் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களாகவும், ஒப்பந்த கூலிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பொது மக்கள் பல வருடங்களாய் வழிபட்டு கொண்டிருக்கும் மதுரை வீரன் கோவிலை இடித்துவிட்டு அதே இடத்தில் 6 தளங்களாக 448 வீடுகளாக அமைக்க உள்ளதாக மாநகராட்சி கூறிய நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையாளருக்கு கோவிலை இடிக்கக் கூடாது என்று மனு அளித்தனர்.

நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு அன்று ஆணையாளரை சந்தித்த பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அதனை கேட்டறிந்த ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்;

தற்போது மாநகராட்சி அமைத்து தந்துள்ள தற்காலிக இடத்தில் வசித்து வருகின்றோம். தாங்கள் வசிக்கும் இப்பகுதியில் கழிவரை சரிவர அமைக்கப்படவில்லை என்றும், சுகாதார வசதியின்றி வாழ்ந்து வருவதாகவும், அடிப்படை வசதி எதுவும் அமைத்து தரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். மக்களுக்காக செயல்படும் அரசாங்கம் எங்களுக்கு ஏற்ப செயல் திட்டம் செய்து தர வேண்டும் எனவும் கூறினர்.

இது குறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் கூறுகையில்;

432 குடும்பங்கள் 4 தளங்களில் வசித்துக்கொண்டிருந்த நிலையில், கல்வி மண்டலமாக அவ்விடத்தில் அமையப்பெற்ற காரணமாக தற்பொழுது, அதனை அகற்றிவிட்டு 6 தளங்களில், 448 குடும்பங்கள் வசிக்கும் வகையில் 45.07 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் லிப்ட் அமைத்துத் தரவுள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டமானது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஒன்றரை ஆண்டுகளில் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...