பண்டிகை காலங்கள் வருவதால் கோவையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் - மாநகராட்சி ஆணையர் தகவல்..!

முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பண்டிகை காலங்கள் வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த அச்சம் பெரிதும் மக்கள் இடத்தில் பரவியுள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கும், தெலுங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது;

கொரோனா 2வது அலையின் போது கோவை மாநகராட்சி சார்பாக வார்டு வார்டாக வாகனங்கள் மூலம் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் அந்த வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால் வாகனங்கள் மூலம் சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ள வாகனங்களை அதிகப்படுத்த உள்ளோம். கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா காலங்கள் வருவதால் மாநகராட்சி சார்பாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா 2வது அலையின்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாநகராட்சி சார்பாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு தினந்தோறும் ஒரு லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு ஆணையாளர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...