இன்னுயிர் காப்போம் திட்டம்: கோவை மாவட்டத்தில் 67 மருத்துவமனைகளில் செயல்படுத்தல்..!

இதில் அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வரை இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் 16 அரசு மருத்துவமனைகள் உள்பட 67 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வாகன விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையளிக்கும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 16 அரசு மருத்துவமனைகள், 51 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 67 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக எல்லைக்குள் விபத்துக்குள்ளாகும் அனைவருக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா கூறியதாவது:

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலைக்காயம், எலும்பு முறிவு என பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சைக்கேற்ப அரசு சார்பில் நிதி அளிக்கப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வரை இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...