சென்னையில் இருந்த சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனை கோவை வரவைத்து தனிப்படை போலிஸ் விசாரணை நடத்தியுள்ளது. சுமார் 3-மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமனிடம் இன்று விசாரணையானது நடைபெற்றது.
கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் விசாரணையானது நடைபெற்றது. சுமார் 3-மணி நேரம் விசாரணை நடைபெற்றதுள்ளது.

இந்த வழக்கில் 81 நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் எஸ்டேட் குறித்து விசாரணை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளன.
இதில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், உதகை மண்டல எஸ்.பி.ஆசிஷ் ஆகியோர் இருந்தனர்.
