கோவையில் சிறப்பு காவல் படை ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமையால் தற்கொலையா..??

ஆய்வாளர் செல்வராஜ் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தற்கொலை, பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை, கரும்முழி பகுதியைச் சேர்ந்தவர் காவலர் செல்வராஜ் இவர் தற்பொழுது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். கோவைப்புதூர் பகுதியில், உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4-ஆம் அணியில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 6-மணிக்கு வழக்கம் போல கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அலுவலகத்திற்கு பணிக்கு வந்த ஆய்வாளர் செல்வராஜ் மதியம் 2.10-மணிக்கு தனது அறையில் கைலி மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முகாமில் உள்ள காவலர்கள் அளித்த தகவலின் பேரில் வந்த உயர் அதிகாரிகள் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், ஆய்வாளர் செல்வராஜ் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட காவல் ஆய்வாளர் செல்வராஜிற்குப் பாபா அருள் ராணி ஜுலியட் என்ற மனைவியும், சந்தோஷ், கிருஸ்டோபர் என்ற இருமகன்களும் உள்ளனர். இதில் சந்தோஷ் ஆவடியில் காவலராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...