கோவையில் இரு சக்கர வாகன டயர் வெடித்ததில் கூலித்தொழிலாளி பலி

கோவை ரோடு சந்தேகவுண்டன்பாளையம் அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.


கோவை: கோவை ரோடு சந்தேகவுண்டன்பாளையம் அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (48) மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு கோவை ரோடு சந்தேகவுண்டன் பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தஇருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குருசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...