கிணத்துக்கடவில் அதிமுக அமைப்பு தேர்தல்

கோவை தெற்கு மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிளை செயலாளர்கள் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி வார்டு செயலாளர்களுக்கான அமைப்பு தேர்தல் அரசம் பாளையம் பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு அரசம் பாளையம் பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிளை செயலாளர்கள் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி வார்டு செயலாளர்களுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது.



மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 60 கிளை செயலாளருக்கும், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 கிளைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களைத் தேர்தல் ஆணையாளர் பனைமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமன் ஆகியோருடன் பெற்றுக்கொண்டு மனுத்தாக்கல் செய்தனர்.

இதேபோல் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் கிளை செயலாளர் தேர்தலுக்கு ஆணையாளரான இளவரசு ஆகியோரிடம் மனுத் தாக்கல் செய்தனர். 2 நாட்கள் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நாளை மாலை அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், அவைத்தலைவர் கனகராஜ், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் கண்ணம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...