தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்..!

கோவையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுவரையறை ஆணைய தலைவர் பழனிக்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.ச.சமீரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோருடன், ஆணையத்தின் செயலர் சுந்தரவல்லி, தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.



கோவையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 18 வார்டுகள் 24 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி, சேலத்தில் தாரமங்கலம், இடங்கனசாலை ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு எண்ணிக்கை 15லிருந்து 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வார்டு மறுவரையின் போது ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆணையத்திடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...