கொரோனா புறநோயாளிகள் சிகிச்சை மையம் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்தகொரோனா புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா 2-ஆவது அலையின்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இட நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா புற நோயாளிகள் பிரிவு,கொரோனா பரிசோதனை மையங்கள் அருகிலுள்ள அரசு கல்லூரிக்கு மாற்றப்பட்டது.

மேலும், அரசு கொரோனா சிகிச்சை மையமும் ஏற்படுத்தப்பட்டது. கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டபோதுகொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது. தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது அரசுக் கல்லூரியில் செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிா்மலா கூறியதாவது:-

தற்போது புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதற்காக அங்குத் தனி மருத்துவக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டமைப்பு எதுவும் அகற்றப்படவில்லை. தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்போது இந்த மையங்கள் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...