காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்புகளை காட்டு யானைகள் இடித்துச் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்கோனா ரயான் சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு எஸ்டேட் பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித் திரிகிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அதிகாலை 4 மணி அளவில் சிங்கோனா 2/3 என்ற குடியிருப்பு பகுதியில் 7 காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து, அங்கு உள்ள செந்தில்குமார், செல்வி, சேகர், ராஜேந்திரன் ஆகியோரின் 4 வீடுகளின் ஜன்னல்களையும், கதவுகளையும் சுவர்களையும் இடித்து சேதப்படுத்தியது.

இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. மக்கள் அதிகாலை நேரங்களில் யானைகளை விரட்ட முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் தொலைத் தொடர்பு இல்லாததால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கவும், பொதுமக்களை பாதுகாப்புக்கு அழைக்கவும் சிரமப்பட்டனர்.

இதனிடையே, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.