நீலகிரி மலை ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது..! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.


நீலகிரி: நீலகிரியில் மலை பாதைகள் சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை செயல்படத் தொடங்கியது.

வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான நூற்றாண்டு பழமைமிக்க இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை இரயில் போக்குவரத்து தடைப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த இரு மாதங்களாக பெய்து வந்த கன மழையால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான இரயில் மலை பாதைகளான கல்லார், ஹில்குரோ, ஆடர்லி போன்ற பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில்பாதை சேதமடைந்தது.

இதன் காரணமாக, மலை ரயில் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வந்த நிலையில் நவம்பர் 23ம் தேதி முதல் மலை ரயில் போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இதனிடையே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து சேவை தற்போது சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.



அதன்படி, இன்று காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு 180 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...