திருப்பூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்; தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ்..!

பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பிக்கு, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர் அருகே உள்ள இடுவாயில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 14 ஆசிரியர்களில் 12 பேர் நிரந்தர ஆசிரியர்களாகவும், 2 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.



இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், ஜாதிப்பெயரை சொல்லித் திட்டியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய வைத்தாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து மாணவ,மாணவிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேசிடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவ,மாணவிகளிடம், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் கீதாவிடம் விசாரணை நடந்தது.

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் எஸ்.பி. சசாங் சாய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...