கோவையில் 132-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வடமாநில வாலிபர் கைது

கோவையில் காரில் கடத்தி வந்த 132-கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநில வியாபாரி கைது செய்யப்பட்டு, தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் காரில் கடத்தி வந்த 132-கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநில வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஆர்.எஸ். புரம் போலீசார் நேற்று தெப்பக்குளம் மைதானம் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மரித்தனர். காரில் 2 பேர் இருந்தனர். ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் காரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹன்ஸ், கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் 132-கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி முகேஷ் குமார், 20 என்பவரைக் கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...