40-அடி சாலையை மீட்டுத்தர கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்

மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 40-அடி சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சாலையை மறைத்து முறைகேடாக மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பள்ளக்காட்டு புதூர் பிரிவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குப் பாத்தியப்பட்ட 40-அடி சாலையைக் கடந்த 2006-ம் ஆண்டு நகராட்சி வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் முன்புறம் அமைந்துள்ள 10-ஏக்கர் நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் வீட்டு மனை அமைக்கும் நோக்கில் மனைப்பதிவு அங்கீகாரம் பெற்றுள்ளனர்.



அதில் 40-அடி சாலையைச் சேர்த்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த சாலையையும் சேர்த்து மனைகள் பிரிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகால், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் 40-அடி சாலையை மீட்டுத்தர அப்பகுதி பொதுமக்கள் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...