மந்திர கல் மோசடி: கோவை தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வழக்கு.!!

பழங்கால மற்றும் அபூர்வ பொருட்கள் மீது ஆர்வம் கொண்ட தொழிலதிபரை மிரட்டி மந்திர கல் இருப்பதாக கூறி மோசடி செய்து பணம் பறித்த வழக்கறிஞர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பழங்கால மற்றும் அபூர்வ பொருட்கள் மீது ஆர்வம் கொண்ட தொழிலதிபரை மிரட்டி மந்திர கல் இருப்பதாக கூறி மோசடி செய்து பணம் பறித்த போலீசார் வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தலோக்நாத் சிங் என்பவரின் மகன் ஹரி ராம் சிங் என்கிற சந்தோஷ் (36). இவர் பொள்ளாச்சியில் மோட்டார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். தொழிலதிபரானஇவருக்குப் பழங்கால மற்றும் அபூர்வ பொருட்கள் மீது ஆர்வம் உள்ளது.

இவரிடம் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராபர்ட், பாலா ஆகியோர் தங்களிடம் சுலைமான் கல் என்ற மந்திரக்கல் வைத்திருக்கும் பழங்குடி மக்கள் தெரியும் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த மந்திரக் கல்லை வைத்திருந்தால் உடலில் ஒரு அபூர்வ சக்தி ஏற்படும் என்றும் துப்பாக்கியால் சுட்டால் கூட குண்டு உடலில் துளைக்காது என்றும் கூறியிருக்கின்றனர்.

இந்த கல்லுக்கு உலக அளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் விலை உள்ளது என்று கூறியுள்ளனர். இதை நம்பிய சந்தோஷ் தனது நண்பர்களிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். இந்த கல்லின் விலை சுமார் 4,500 கோடி ரூபாய் என்றும் ஒரு கோடி ரூபாய் முன்பணமாகக் கொடுத்தால் அந்த கல்லைப் பழங்குடி மக்களிடமிருந்து நாம் வாங்கி உலக சந்தையில் விற்று நாம் பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என்று ராபர்ட், பாலா ஆகியோர் ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர்.

இதேபோல திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் இடமும் இந்த விஷயத்தைக் கூறி உள்ளனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த கல்லை வாங்குவதற்காகச் சாந்தி ஒரு கோடி ரூபாயைத் தயார் செய்துள்ளார். தொடர்ந்து சாந்தி, ஆறுமுகம், செந்தில்குமார், யாபேஸ் ராஜா, ஜெயராமன், ராபர்ட், பாலா ஆகியோருடன் சந்தோஷ் திண்டுக்கல் மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அவர்கள் ஒட்டன்சத்திரம் அடுத்த பாச்சலூர் கிராமத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

அங்கு வனப்பகுதிக்கு அவர்கள் பணத்துடன் சென்ற பொழுது திடீரென மலைவாசிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கி உள்ளனர். இதில் நிலைகுலைந்து போன இந்த கும்பலிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மலைவாசிகள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து பயந்துபோன அந்த கும்பல் அங்கிருந்துதப்பி மலை பகுதியை விட்டு வெளியே வந்தனர்.

பிறகு இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படும் என்று சாந்தி கூறியுள்ளார். மேலும் இதுபற்றி எந்த புகாரும் அளிக்க வேண்டாம் என்று கூறி அவரவர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கூழை இப்ராகிம் என்கிற இப்ராகிம் என்பவர் செல்போன் மூலம் சந்தோசை அழைத்துப் பேசியுள்ளார்.

அப்போது சாந்தியிடம் கொடுத்து இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் தன்னுடையது தான் என்றும் அந்தப் பணத்தைத் திருப்பி தர வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்றும் தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி இருக்கிறார். இதையடுத்து சந்தோஷ் பயந்துபோய் அழைப்பு வந்த செல்போன் எண்ணை பிளாக் செய்து வைத்தார்.

இதையடுத்து திண்டுக்கல்லிலிருந்து நளினி என்ற வழக்கறிஞர் சந்தோசை செல்போன் மூலம் அழைத்து கன்பரன்ஸ் கால் மூலம்புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கூழை இப்ராகிம் என்கிற இப்ராகிம் உடன் பேச வைத்துள்ளார். அப்போது 25 லட்ச ரூபாய் பணம் உடனடியாக தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சந்தோஷ் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

மேலும் சில நாட்கள் கழித்துத் தொடர்ந்து மிரட்டல் விடுக்கவும் இன்னும் மூன்றரைலட்ச ரூபாயை சந்தோஷ் கொடுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து திண்டுக்கல் வழக்கறிஞர் நளினியும் கூழை இப்ராஹீமும் செல்போன் மூலம் சந்தோசை அழைத்து மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து பயந்துபோன சந்தோஷ் நேற்று குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...