திருப்பூர் சுப்பையா சிபிசி பள்ளி வளாகத்தில் இருந்த 25 வருடம் பழமையான நாவல் மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்து சாதனை..!

பள்ளி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மரத்தை அப்புறப்படுத்தாமல் பள்ளியில் வேறு இடத்தில் நடவு செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சுப்பையா சிபிசி பள்ளி வளாகத்தில் இருந்த 25 ஆண்டுகால பழமையான நாவல் மரம் இன்று வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது.

திருப்பூர் கல்லூரி சாலையில் சுப்பையா சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், புதிய கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுமார் 20 அடி உயரத்தில் வளர்ந்த 25 ஆண்டுகள் பழமையான நாவல் மரம் உள்ளது.

இதனை வெட்டி அகற்றாமல் வேறு இடத்தில் நடவு செய்ய பள்ளி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் முடிவு செய்து இன்று ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அந்த 25 ஆண்டு கால பழமையான நாவல் மரத்தை தோண்டி 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளியின் வேறு பகுதியில் நடவு செய்யப்பட்டது.



பள்ளி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி நிர்வாகம் 25 ஆண்டு கால பழமையான மரத்தை அப்புறப்படுத்தாமல் பள்ளியில் வேறு இடத்தில் நடவு செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...