காஷ்மீர் போல காட்சி அளித்த உதகை: கடும் குளிரால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5-டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்படப் பல பகுதிகளில் உறைபனி பொழிவால் மினி காஷ்மீர் போல் உதகை காட்சி அளித்தது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5-டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்படப் பல பகுதிகளில் உறைபனி பொழிவால் மினி காஷ்மீர் போல் உதகை காட்சி அளித்தது.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாகத் துவங்கியுள்ளது.

குறிப்பாகக் கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது.

உதகையில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5-டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்தது. மேலும் கடும் உறைபனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்பட்டது.

இதனால், வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். குறிப்பாக உறைபனியின் தாக்கம் வழக்கத்தைவிட இன்று அதிகரித்துள்ளதால், அதிகாலை விவசாயம் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் படைத்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...