கோவை ஒண்டிப்புதூர் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை ஒண்டிப்புதூர் அடுத்த மீனாட்சி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிப்சன் என்பவரின் மகன் காட்வின் (29). திருமணமான இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சிறு வயது முதலே மூச்சுத் திணறல் நோய் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து அதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு அவரது மனைவி வேளாங்கண்ணி காட்விணும் பைக்கில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தனர். உக்கடம் வாலாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மயக்கம் வருவது போல இருப்பதாக காட்வின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வேளாங்கண்ணி தனது ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய காட்வின் தடுப்புச் சுவரை பிடித்து நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி காட்வின் குளத்தில் விழுந்தார். இதையடுத்து, அவரது மனைவி வேளாங்கண்ணி சத்தம் போட்டார்.

பின்னர், அருகில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் விழுந்து கிடந்த காட்வினை மீட்டனர். உடனே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...