கோவையில் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் - தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு..!

தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, இருக்கை வசதி செய்து தராமல் இருப்பது கண்டறிந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர்களின் நலன் கருதி கடைகள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டுமென கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மேற்கண்ட திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இருக்கைகள் வசதி செய்துதர வேண்டும்.

மேலும், இருக்கை வசதி குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, இருக்கை வசதி செய்து தராமல் இருப்பது கண்டறிந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், இது தொடர்பாக அனைத்து வணிக நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு இருக்கை வசதிகளை செய்து அரசின் அமலாக்கப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...