கிணத்துக்கடவில் திமுக - அதிமுக மோதல்.! சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு..!

கிணத்துக்கடவு அருகே அதிமுக மற்றும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை வீசியதாக கூறப்படுகிறது.


கோவை: கிணத்துக்கடவு அருகே அதிமுக மற்றும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம் நீண்ட நாட்கள் பிறகு நிரம்பி உள்ளது. குளம் நிரம்பியதை கொண்டாடும் விதமாகவும், கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியுடன்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோதவாடி குளத்தை பார்வையிட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த திமுக வினர் சிலருக்கும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் மோதிக் கொண்டு உள்ளனர்.



இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது சிலமர்ம நபர்கள் செருப்பை வீசியதாககூறப்படுகிறது. இதனையடுத்து,அவரை காவல்துறையினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்து வந்து வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...