கோவையில் 5 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது - ரூ.23 லட்சம் மற்றும் கார் பறிமுதல்..!

இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் 5 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், ரூ.23 லட்சம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

கேரள மாநில லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி எனப்படும் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகளவில் நடக்கிறது. கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இவ்விற்பனையை தடுக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போத்தனூர் - குறிச்சி பிரிவு சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். கருப்பராயன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை விசாரித்தனர். அவர்கள், நல்லாம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம், காந்திபுரத்தில் மொபைல்போன் கடை நடத்தி வருவதும், உடனிருந்தது அவரது உதவியாளரான திருச்சியை சேர்ந்த பாண்டியராஜ், எனவும், அவர்களது காரில், 23 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பதும் தெரிந்தது.

பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல், ஆன்லைன் லாட்டரி விற்று வருகிறார். இவருக்கு, ஒன்றரை ஆண்டுகளாக பாண்டியராஜ் உதவியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர்களிடமிருந்த ரொக்கம், லாட்டரி விற்பனையில் வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடேசன் வழக்கு பதிவு செய்து, ரொக்கம், 23 லட்சம், இன்னோவா கார் ஒன்று, மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...