உதகை மலை ரயில் சேவை நாளை முதல் இயக்கம்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

நிலச்சரிவால் பழுதடைந்த ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


நீலகிரி: உதகை மலை ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் சேவை இயங்கி வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முழுவதும் பல் சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.

மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி இதமான சூழலில் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.



இந்நிலையில், கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

மேலும்,தொடர் மழையின் காரணமாக மலை ரயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மலை ரயில் தண்டவாளத்தில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால் இம்மலை ரயில் சேவையானது நாளை அதாவது டிசம்பர் 22 ஆம் தேதி முதல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நிலச்சரிவால் பழுதடைந்த ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...