கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடக்கழிவுகளைச் சாலையோரம் கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடக்கழிவுகளைச் சாலையோரம் கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சியில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும். அந்தந்த இடத்தின் உரிமையாளர்கள் குப்பைகளைக் கொட்டாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.
தூய்மையான மாநகராட்சியாக வைத்துக்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கட்டிட கழிவுகளை பெறுவதற்கு மாநகராட்சி சார்பாக வாகனங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.