பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை தொழில்நுட்ப சட்டப்பிரிவில் கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை: பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை தொழில்நுட்ப சட்டப்பிரிவில் கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி குறித்து இழிவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகார் மனுவில் வேலூர் இப்ராஹிம் கடந்த 13-ஆம் தேதியன்று அவருடைய முகநூல் பதிவில் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான ராகுல் காந்தி குறித்து இழிவான வார்த்தையைப் பயன்படுத்திப் பதிவு செய்திருப்பதாகவும் இதனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே இதுபோன்று பதிவிட்ட வேலூர் இப்ராஹிமை தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.