பொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரிப்பு குடோன் கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மூட்டை மூட்டையாக 10-டன் உரம் பறிமுதல் செய்து வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரிப்பு குடோன் கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குடோன் அமைத்து போலி பொட்டாஷ் உரம் தயாரித்து வருவதாகப் பொள்ளாச்சி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் அரசகுமார் தலைமையிலான அதிகாரிகள் குடோனின் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடோனின் போலி பொட்டாஷ் உரம் தயாரிப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குடோனில்இருந்த ஊழியர்களிடம்நடத்திய விசாரணையில், ராதாகிருஷ்ணன் என்பவரின் தோட்டத்தில் ஒரு பகுதியை தேவராஜ் என்பவர் வாடகைக்கு எடுத்து போலி பொட்டாஷ் உரம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த வேளாண்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உப்பு, கோலப்பொடி உள்ளிட்ட பொருட்களில் சிறிதளவு பொட்டாஷ் உரத்தைக் கலந்து "இந்தியன் பொட்டாஷ்" என்ற பெயரில் போலி உரம் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
தமிழகம் எங்கும் பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு நிலவுவதால் இதுபோல போலி உரம் தயாரிப்பவர்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே விவசாயிகள் போலி உரத்தை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து போலி உரம் தயாரித்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.