கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைவிடப்பட்ட 27-குழந்தைகள் மீட்பு

கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் கைவிடப்பட்ட 27 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் கைவிடப்பட்ட 27 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை வேண்டாம் என கருதும் பெற்றோர் சில நேரங்களில் சாலையோரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விட்டுச் செல்கின்றன.

குழந்தைகள் கைவிடப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப் படுகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட ஆதரவற்ற 18-குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட ஆதரவற்ற 9- குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் கூறியதாவது:-

திருமணமாகாமலேயே பிறக்கும் குழந்தைகள் ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என நினைப்போர் எங்களிடம் ஒப்படைக்கலாம். இவ்வாறு ஒப்படைப்பவரின் ஊரின் பெயர் விவரங்கள் வெளியே தெரியாது.

குழந்தையை ஒப்படைப்பதாக விரும்பிக் எழுதி கொடுத்தால் போதும் ஒப்படைக்கப்பட்ட குழந்தையை 60 நாட்களுக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

60 நாட்கள் கழித்து குழந்தையைக் கேட்க முடியாது அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது பிறக்கும் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தாள் மருத்துவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்து விடுவார்கள்.

பின்னர் பிறக்கும் குழந்தையை நாங்கள் சென்று பெற்றுக் கொள்வோம். இதைத்தொடர்ந்து தத்துவ மையத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படும் குழந்தையைத் தத்தெடுக்க ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை படி குழந்தை ஒப்படைக்கப்படும் என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...