கோவை மருதமலை அருகே இரவு முழுவதும் அட்டகாசம் செய்த யானை கூட்டம்..! அரிசி மூட்டைகள், பழ வண்டி மற்றும் வீடு சேதம்.

கோவை மருதமலை வனப்பகுதியில் இருந்து நேற்று 6 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று இரவு ஐ ஓ.பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது.


கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் இருந்து நேற்று4 பெண் யானைகள், ஒரு ஆண் யானை மற்றும் ஒரு குட்டி யானை கொண்ட கூட்டம் நேற்று இரவுஐ ஓ.பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இந்த யானைக் கூட்டம், அங்குள்ள ஆறுமுகம் என்பவர் அரிசிக் கடையின் இரும்பு ஷட்டரைக் கால்களால் உதைத்து, உடைத்து உள்ளிருந்த சுமார் 13 அரிசி மூட்டைகளை வெளியே இழுத்தன. பின்னர், மூட்டைகளில் இருந்த அரிசியை சாப்பிட்டும் , தூக்கி வீசியும் சேதப்படுத்தின.

பின்னர், ஐ.ஓ.பி காலனி தளபதி நகரில் நுழைந்த யானைகள், அங்கு பழ வியாபாரியான வள்ளிகண்ணு என்பவர் சாலையோரம் நிறுத்தியிருந்த தள்ளு வண்டியிலிருந்த பழங்களைச் சாப்பிட்டன. இதே போல, பாலாஜி நகரில் ஜெயந்தி என்பவரின் தள்ளு வண்டியில் இருந்த வாழை, ஆப்பிள், கொய்யா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிட்டு விட்டு, தள்ளு வண்டிகளை உருட்டி சேதப்படுத்தின.

அங்கிருந்து மீண்டும் ஐ.ஓ.பி காலனி, தளபதி நகருக்குள் புகுந்த யானை கூட்டம், செல்வன் (63), அவரது மனைவி மணி (55) ஆகியோர் ஹாலோபிளாக் கற்களால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவரை உடைத்து, வீட்டிலிருந்த கட்டில், பீரோ, பாத்திரப் பண்டங்களை உருட்டி, உள்ளே இருந்த அரிசி மூட்டை ஒன்றை இழுத்துச் சாப்பிட்டு, சேதப்படுத்தின.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஐ.ஓ.பி குடியிருப்பு பகுதியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட யானை கூட்டத்தைவனப்பகுதிக்குள் விரட்டினர். உணவு தேடி மீண்டும் யானை கூட்டம் வருமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...