கோவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்..!

நகர் ஊரமைப்புத் துறை தொடர்பான கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, திட்ட மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன.


கோவை: கோவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் நகர் ஊரமைப்புத் துறை தொடர்பான கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, திட்ட மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

கோவை அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள நகரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மனுக்களைப் பெற்று வருகிறார்.



அப்போது பேசிய அவர், வீட்டுவசதி துறையில் சில பிரச்சினைகள் இருப்பதை அறிந்து வைத்துள்ளதாகவும், அதனை சரி செய்ய சிங்கிள் விண்டோ சிஸ்டமே சரியாக இருக்கும் என பலரும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இது ஒரே நாளில் சாத்தியம் இல்லை எனக்கூறிய அவர், மனு கொடுப்போர் ஆதாரங்களை முழுமையாக வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார். அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான அனைத்து ஆவணங்களையும் கேட்டுப்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இது போன்ற முகாம்களின் மூலம் இப்பிரச்னைகளை களைய முடியும் எனவும் தெரிவித்தார்.



மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் எனவும், மக்கள் முழுமையான ஆவணங்களை கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி பேசினார்.

இந்த நிகழ்வில், வீட்டு வசதி வாரிய செயலாளர் மக்வானா, நகர்புற வளர்ச்சித்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, திமுக சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...