யானை முகாமிற்கு அருகிலேயே கிராமம் இருப்பதால் கிராமத்திற்கும் யானை முகாமிற்கும் இடையில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆனைமலை டாப்சிலிப் பகுதி கோழிக்கமுத்தி வனக்கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோழிக்கமுத்தி கிராமத்தில் மலசர், மலைப்புலையர், காடர் இனத்தை சேர்ந்த 185 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கிராமத்தில் உள்ள மக்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வனத்துறையில் யானை வளர்ப்பு, உதவி பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், சூழல் கண்காணிப்பாளர் என பணிபுரிந்து வரும் நிலையில் தங்கள் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் அளித்த மனுவில்
1.தரமான கான்கிரீட் வீடுகளை கழிப்பறை குளியலறை வசதியுடன் கட்டி தர வேண்டும்.
2. யானை முகாமிற்கு அருகிலேயே கிராமம் இருப்பதால் கிராமத்திற்கும் யானை முகாமிற்கும் இடையில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும்.
3. கிராமத்திலேயே குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
4. மின்வசதி செய்து தர வேண்டும்.
5. டாப் சிலப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முழு நேர மருத்துவர் செவிலியரை பணியமர்த்த வேண்டும்.
6. சாலை வசதிகளை மேம்படுத்தி காலை, மாலை பேருந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. பெண்களுக்கு தொழில் வாய்ப்பு ஈட்டக் கூடிய பயிற்சி அளிக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.