கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை உள்ளதால், வரும் 22ம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
கோவை:குன்னுாரில் இருந்து, 22ம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்பட உள்ளதால், முன்பதிவு துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாகக் கடந்த 4, 5 -ம் தேதிகளில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
பாறைகள் விழுந்ததையடுத்து நவம்பர் 6 -ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மண்சரிவு ஏற்பட்ட 4 இடங்களையும் ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து உள்ளனர். அவ்வப்போது மழை பெய்ததால் மலை ரயில் இயக்காமலிருந்தன.
தற்போது மழை குறைந்துள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள், என்பதால் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றன.
இதனால் மீண்டும் வரும் 22-ஆம் தேதி முதல் மாலை மலை ரயில் இயக்க ரயில்வே துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக குன்னூரிலிருந்து ஒரு பெட்டியுடன் மலை ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது.