திருப்பூரில் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள்..!

நள்ளிரவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் ஆறு பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.


திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவில் மதுபோதையில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட பவானி நகர் பகுதியில் நேற்று இரவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் ஆறு பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், தகாத வார்த்தைகளால் திட்டியும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், அந்த வழியே சென்ற பொதுமக்கள் இந்த காட்சியைக் கண்டு அச்சமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அவ்வழியே சென்ற ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்த போது அந்த சண்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் அதனை எடுக்கக் கூடாது என்றும் அவரிடம் வாதிட்டனர்.

இதையடுத்து, இந்த வீடியோவானது தற்போது திருப்பூரில் வைரலாகி வருகிறது. இதுபோன்று இளைஞர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் சண்டைகளை சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து இது போன்ற பொது இடங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...