திருப்பூரில் பூட்டிய வீட்டில் இளம் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்துபல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப் புதூர் பகுதியில் சகுந்தலா என்பவர் குடியிருந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான வீடுகளை வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓடிஸாவைச் சேர்ந்த இளைஞர் இவரின் வீட்டில் அறை எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்‌. வாடகை கொடுக்காத நிலையில் இரண்டு நாட்களாக வீடு பூட்டியே கிடந்துள்ளது‌. அருகே சென்று பார்த்த போது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது.

இவரது புகாரையடுத்து திருப்பூர் மத்திய காவல் நிலையபோலீசார் விரைந்து வந்தனர்.பூட்டை உடைத்துப் பார்த்ததில் ஓடிஸாவைச் சேர்ந்த நாராயணி ஜீனா என்ற பெண் சடலமாகப் படுக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது கழுத்தில் தூக்கிட்டு உயிரிழந்ததற்கான தழும்புகள் தெரிந்துள்ளது.

போலீசார் விசாரணையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை எழுந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நாரயணி ஜீனா தூக்கிட்டு தற்கொலை செய்தை அறிந்த அவரது கணவர் உடலை கீழே இறக்கி வைத்து விட்டு பயந்து போய் தப்பி ஓடினாரா? அல்லது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினாரா? என்ற கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...