கோவையில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்கள பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேலும், முதலமைச்சர் அறிவித்த ஊக்க தொகையையும் பெற்று தரும்படி முன்கள பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவையில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்கள பணியாளர்களான தங்களுக்கு சம்பளம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு ஒரு மாத கால சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக பணியாற்றிய முன்கள பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கடந்த மே மாதம் முதல் ஒப்பந்த பணியாளர்களாக மக்களிடம் உடல் நல விவரங்கள் சேகரிப்பு, தடுப்பூசி செலுத்துதல் ஆகிய வேலை பார்த்து வந்த நிலையில் அக்டோபர் மாதம் 31ம் தேதி பணி நிறைவுற்றதாகவும் ஆனால், அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பள பணத்தை வாங்கி தர வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், முதலமைச்சர் அறிவித்த ஊக்க தொகையையும் பெற்று தரும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...