கோவையை வஞ்சிக்கும் ரயில்வே துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தந்தை பெரியார் திராவிட கழக்கத்தினர் உட்பட பல்வேறு கட்சியனர் அறிவிப்பு.

தென்மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து ரயில்களை இயக்காமல், கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாக, ரயில்வே துறையை கண்டித்து 27 ஆம் தேதி போராட்டம்.


கோவை: கோவை - பொள்ளாச்சி அகல ரயில் பாதையை முழுமையாக பயன்படுத்தி தென்மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து ரயில்களை இயக்காமல், கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாக, ரயில்வே துறையை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

முதற்கட்டமாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வரும் 27ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர்கு.இராமகிருட்டிணன்: கோவை - திண்டுக்கல் ரயில் பாதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசு கோவை பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க மறுக்கின்றார்கள். தற்போது, கொண்டுவந்துள்ள திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க மறுத்து பாலக்காடு- திருச்செந்தூர் என்று அறிவித்திருப்பது, கோவை மக்களை வஞ்சிக்கும் செயல்.

இதனை கண்டிக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும், திருச்செந்தூர் ரயிலை கோவை வழியாக இயக்க வேண்டும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பாதைகளை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 27ம் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் முதல்கட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ்,

தமுமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...