கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக நிர்வாகி கொலை எதிரொலி: கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

மேலும், போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக நிர்வாகி கொலை எதிரொலியாக கோவையில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடைபெற்ற சில மணிநேரம் கழித்து பாரதீய ஜனதா பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த 2 கொலைகளால் கேரளாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த கொலையை கண்டித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெறுவதுடன், சமூகவலைத்தளங்களிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற கொலைகளால் கோவையில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க காவல்துறை ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் நகரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய வழிபாட்டு தலங்கள், கோவில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...