கோவையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

வேலைவாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கக் கோரியும், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 1% வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் கோயம்புத்தூர் காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகையாக தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக ஏழை எளிய மாற்று திறனாளிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்குவது போன்று 3000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் பணிகளில் காது கேளாதவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு கூறியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.



மேலும், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விளம்பரத்திற்காக மட்டுமே அரசை பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டிருந்த அவர்கள், அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி பணியாளர்கள் போன்ற இதர பணிகளில் 1% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல, வேலைவாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...