பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி..!

சூரிய ஒளி மின்சாரத்தை வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்காக அரசு மானியம் வழங்கி வருவதாக விழிப்புணர்வு செய்தனர்.


கோவை: மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார வார விழா கடைபிடிக்கப்படுகிறது இதனையடுத்து, மின் சிக்கனத்தை வலியுறுத்தி மின்வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இன்று பொள்ளாச்சி மின்வாரிய ஊழியர்கள் சார்பில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு அவசியமானது, மின்சாரத்தை தேவையில்லாமல் விரயமாக்குவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.



பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய பேரணி, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மின்வாரிய ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.

பொதுமக்கள் மின் விரயம் ஆவதை தவிர்க்க குண்டு பல்புகளை மாற்றி எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும், குமிழ் விளக்கை பயன்படுத்துவதால் 90 விழுக்காடு மின்சாரம் வீணாகிறது. தேவையில்லாத போது விளக்கு, மின்விசிறி, மின் சாதனங்களை நிறுத்திவிட வேண்டும்,

மேலும், சூரிய ஒளி மின்சாரத்தை வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்த வேண்டும், அதற்காக அரசு மானியம் வழங்கி வருகிறது.

எனவே, பொதுமக்கள் வரும் காலங்களில் மின்சார சிக்கனத்தை முழுமையாக கடைபிடித்து நாட்டிற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...