மஞ்சூர் - கோவை சாலையில் யானை நடமாட்டம்: கவனமாகப் பயணிக்க வனத்துறை எச்சரிக்கை

மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


நீலகிரி: மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாகக் கோவைக்கு சாலை உள்ளது. இந்த சாலையானது மஞ்சூரிலிருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாகக் கோவைக்குச் செல்லும் பிரதான சாலை ஆகும்.

தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. மஞ்சூர்- கோவை சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது.

இதனால் ஒரு வனப்பகுதியிலிருந்து மற்றொரு வனப்பகுதிக்கு இடம்பெயரும் வனவிலங்குகள் அந்த சாலையில் உலா வருவது வழக்கம். தற்போது இந்த சாலையில் இரண்டு குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

காலை மற்றும் மாலையிலேயே உலா வருகின்றன. அவ்வப்போது அரசு பேருந்துகள் உள்ளிட்டவற்றை மறிக்கின்றன. நேற்று இரவு கெத்தைக்குச் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து.



சிறிது நேரம் கழித்து வழிவிடவே பேருந்து புறப்பட்டுச் சென்றது. யானைகள் நடமாட்டம் உள்ளதால், இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாகப் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...